1000 போலீசாருக்கு பிரியாணி, மாஸ்க்: முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்

திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தை குரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக செயலாளர் அனுமதி கடிதம் வழங்கினார். " alt="" aria-hidden="true" />திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திருப்பூரில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் சார்பில் 27.10 லட்சத்துக்கான காசோலையை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.விஜயகார்த்திகேயன்  முன்னிலையில் மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு உடுமலை ராதாகிருஷ்ணனிடம் வழங்கினர்.


" alt="" aria-hidden="true" /> இதில் சுப்ரீம் மொபைல் நிறுவனத்தின் சார்பில் ரூபாய் 25 லட்சமும், இதேபோல் பிற தனியார் நிறுவனங்கள் சார்பில் 2.10 லட்சம் என 27.10 லட்சம் நிவாரணத்தொகையை அமைச்சரிடம் நன்கொடையாளர்கள் வழங்கினர். மேலும் ஆதிமுக மாநகர மாவட்ட கழகம் சார்பில் அதிமுக கட்சி அலுவலகத்தை குரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகர திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் திரு.எம்.எஸ்.எம்.ஆனந்தன் அனுமதி கடிதத்தை வழங்கினார். இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு விஜயகுமார் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.இதையடுத்து திருப்பூர் அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில்  திருப்பூர் மாநகரில் இரவு பகலாக பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து காவலர்களுக்கும் மாவட்டச் செயலாளர் எம் எஸ் எம் ஆனந்தன் அவர்கள் மதிய உணவாக சிக்கன் பிரியாணி மற்றும் முக கவசங்களை வழங்கினார்.இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார், உதவி கமிஷனர் வெற்றிவேந்தன், இன்ஸ்பெக்டர் சென்பகவள்ளி, நீதிராஜன், ஷாஜகான், அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


 


Popular posts
நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்பூரில் பொதுமக்களுக்கு இலவச மாஸ்க்
Image
திருப்பூரில் காவலர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர்; இந்திரா சுந்தரம் வழங்கினார்
Image
வேலூர் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வேலூர் வந்து சொந்த வீடுகளில் தங்கி இருப்பவர்கள் வெளியில் செல்லாதவாறு வீட்டிலேயே இருக்கிறார்களா என கண்காணித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது ஒரு குழு,
Image
8 ஊராட்சிகளுக்கு கிருமிநாசினி இயந்திரம்: எம்.எல்.ஏ., ராஜாகிருஷ்ணன் வழங்கினார்
Image