திருப்பரங்குன்றத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை
மதுரை 

திருப்பரங்குன்றம் தேவி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 42) இவரது மனைவி நாகம்மாள் (வயது 36) சிவகங்கை மாவட்டம் இடையமேலூரைச் சேர்ந்தவர்,

இவர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது 16 பவுன் நகையும், ரூ.5 லட்சம் வரதட்சணையாக வழங்கப்பட்டது.இந்த நிலையில் தற்போது கூடுதல் வரதட்சணை கேட்டு  முருகன் மனைவி நாகம்மாளை சித்ரவதை செய்ததையடுத்து.

நாகம்மாள் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து திருப்பரங்குன்றம் மகளிர் போலீஸார் .

இதுகுறித்து விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.