சிஎம்சி முன்னாள் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்டான்லி ஜான் காலமானார்

CMC முன்னாள் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்டான்லி ஜான் சென்ற 23 ஆம் தேதி பெங்களூரில் தனது " alt="" aria-hidden="true" />இல்லத்தில்  காலமானார். CMC யின் இருதய அறுவை சிகிச்சை பிரிவில் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். இவரது மனைவி டாக்டர் லில்லி ஜான் மருத்துவ பிரிவு தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றினார். 1961 ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் முதல் செய்யப்பட்ட இருதய அறுவைசிகிச்சை ( Open Heart Surgery ) CMC யில் நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சையை நிகழ்த்தின குழுவில் டாக்டர் ஸ்டான்லி ஜான் முக்கிய பங்கு வகித்தார். இவருடைய சாதனைகளின் காரணமாக B.C.ராய் விருது மற்றும் 1975 ஆண்டு பத்ம ஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். இவருடைய இரண்டு மகன்கள் டாக்டர் ரஞ்சித் ஜான் மற்றும் ரோஹன் ஜான் வெளிநாட்டில் மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். இவரது உடல் நல்லடக்கம் பெங்களூரில் வருகின்ற வெள்ளிக்கிழமை 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது.



Popular posts
நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்பூரில் பொதுமக்களுக்கு இலவச மாஸ்க்
Image
கோவை குனியமுத்தூர் 87வது வார்டு பகுதியில் திருவள்ளுவர் நகர் பிரிண்ஸ் அவன்யு,போன்ற பகுதிகளில் முன்னாள் கவுன்சிலர் இளங்கோ மற்றும் சுகாதார பிரிவு மேற்பார்வையாளர் கோபிநாத்
Image
வெளிநாட்டிலிருந்து பெரியகுளம் வந்த 18 பேர் தனிமைப்படுத்தபட்டு தீவிர கண்காணிப்பு
Image
திருப்பூரில் காவலர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர்; இந்திரா சுந்தரம் வழங்கினார்
Image
முதல்- அமைச்சர், அமைச்சர்களின் ஊழல்களை ஆதாரத்துடன் கொடுப்பேன் - தனவேலு எம்.எல்.ஏ.